இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ...
தாய் தந்தை தமையன் தங்கை இவர்களின் நலம் பேணிய
உன் 50 ஆண்டு கால வாழ்க்கை ...
இன்றைய சந்ததியினருக்கு ஒரு நல்ல பாடம் ...
அன்பு பாசம் நேசம் கடமை ...
இவை மட்டுமே இன்று வரையிலும் உன் உடமை ...
எங்கள் தேவைகள் எதுவாக இருப்பினும்...
இல்லை என்று சொல்லாமல் செய்யத் துணிந்த உன் மனம்...
அதற்கு மறுப்பு சொல்லத் தெரியாதவளுடனான உன் திருமணம் ...
என் வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகள்
உன் உழைப்பாலும் உன் தியாகத்தாலுமே பலிதம் ஆயின …
நம்மிடையே
கருத்து வேறுபாடுகள் இருப்பினும்...
என் உணர்வுகளுக்கு
எப்போதுமே மதிப்பளித்தாய் ...
எனக்குத்
தேவையான தருணங்களில்
என்னுடன்
நின்றாய்...
சந்தோஷமோ
துக்கமோ நீ அதைப் பகிர்ந்து கொள்ளும்...
முதல் ஆளாய்
நான் எப்போதுமே இருந்திருக்கிறேன் ...
அம்மாவின்
மறைவிற்குப் பின்...
நீ எனைத்
தாயாய் பாவித்த நொடிகள் எனக்குப் பெருமை....
அப்பா இருந்த
போதிலும்
அப்பா மறைந்த
பின்னும்
எப்போதுமே
நீ எனைப் பெறாத தந்தையாகவே உணர்ந்திருக்கிறேன்...
இப்படி உணர்வுகளும்
உரிமைகளும்
பின்னிப்
பிணைந்த உறவுகள்
இந்நாட்களில்
ரொம்ப குறைவு...
நமக்கு அது
வாய்த்தது பெரும் பேறு...
உன்னை நீ
பிறந்த தினத்தில் மட்டுமல்ல...
வாழ்நாள்
முழுவதும் கொண்டாட
நான் கடமைப்
பட்டிருக்கிறேன்...
இவை எதுவும்
வெறும் வார்த்தைகளோ ...கவிதையோ...
சபை நாகரீகமோ
அல்ல....
என் ஆழ் மனதில்
உள்ள நன்றியின் வெளிப்பாடு....
இன்னும் இனிமையாக
செழுமையாக
நீ வாழ்க
பல்லாண்டு!
உன் அன்பாலும்
ஹாஸ்யத்தாலும்
உன் உறவுகளின்
உலகாண்டு !

அண்ணன் ஒரு கோயிலை போல தங்கை அதன் தீபம் போல பல்லாண்டு வாழ்க இருவரும் இதே அன்போடு
ReplyDeleteThank you
ReplyDelete