அம்மா நீ வேண்டும்...
என்னுடைய நல்ல நாட்களில் நல்ல தருணங்களில் நீ வேண்டும் …
என் மகள்களின் சாதனைகளை பகிர்ந்து கொள்ள …
அவர்களின் அழகிய சிரிப்புகளில் மனம் மகிழ..
அவரகள் என்னை அணைக்கும் நொடிகளில் …
என் சமையலை ரசித்து உண்ணும் வேளைகளில் …
அவர்களின் நட்புக்காக அவர்கள் குரல் கொடுத்த பெருமையை நான் பகிர ...
என்னிலும் அதிகமாக பெருமை கொள்ள நீ வேண்டும் ....
என் மகள்கள் எதிலோ தோல்வி உற்று …
அவர்கள் வேதனையை என்னிடம் பகிர …
நான் அவர்களை அணைத்து ஆறுதல் கூறும் நேரத்தில் ...
முடியாமல் தொடரும் நாட்களில் ...
அலுப்பாய் இருக்கும் நாட்களில் ...
எதையோ மறந்து தேடி தவிக்கும் தருணங்களில்...
தேடியதை மீட்டு தர நீ வேண்டும்....
சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாத நாட்களில்...
சொல்வதற்கு ஏராளமாய் இருக்கும் நாட்களில்,,,,
தனிமை கொள்ளும் நாட்களில்...
என்னை சுற்றி உறவுகள் கும்மி அடிக்கும் நாட்களில்....
இப்படி எல்லா நாட்களிலும் நீ வேண்டும்...
இன்று என் மகள்களுக்கு நான் அம்மாவாய் இருக்கும் நேரங்களில்...
அம்மா என்ற பொறுப்பின் சுமையை முழுதாய் உணரும் தருணங்களில்...
நெருக்கமாய் ஆதரவாய் அணைக்க ...
உன் மடியில் தலை வைத்து உறங்க...
அந்த கதகதப்பில் நிம்மதி காண
முன்னிலும் அதிகமாய்
முன்னிலும் முழுமையாய் நீ வேண்டும்!

No comments:
Post a Comment